செய்திகள்

ஐஎஸ்எல்: கேரளாவைப் போட்டியிலிருந்து வெளியேற்றிய பெங்களூர் அணி!

கேரள அணிக்கு அது வாழ்வா சாவா ஆட்டம். ஜெயித்தால் மட்டுமே பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும்...

எழில்

கேரள அணிக்கு அது வாழ்வா சாவா ஆட்டம். ஜெயித்தால் மட்டுமே பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும். 

ஆனால் பெங்களூர் எஃப்சி அணியின் அசத்தலான திறமையால் கேரள பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணி ஐஎஸ்எல் போட்டியை விட்டு வெளியேறியுள்ளது. 

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற நேற்றைய ஐஎஸ்எல் ஆட்டத்தில் பெங்களூர் அணி 2-0 என்கிற கணக்கில் வென்றுள்ளது. இரு கோல்களும் கூடுதல் நேரத்தில் கிடைத்தவை. 

கேரள அணி 18 ஆட்டங்களில் 25 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது. நேற்றைய வெற்றியின் மூலம் பெங்களூர் அணி, 18 ஆட்டங்களில் 40 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அடுத்ததாக, 29 புள்ளிகளுடன் புனே, சென்னை ஆகிய அணிகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களிலும் கோவா அணி 27 புள்ளிகளுடன்
மூன்றாம் இடத்திலும் உள்ளன. 

சென்னையில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதவுள்ளன. மும்பை அணி ஜெயித்தாலும் பிளே ஆஃப் போட்டிக்குத் தகுதி பெறமுடியாது. ஞாயிறு அன்று ஜம்ஷெட்பூர் - கோவா அணிகள் மோதவுள்ளன. 26 புள்ளிகளுடன் உள்ள ஜம்ஷெட்பூர் அந்த ஆட்டத்தில் வெல்லும்பட்சத்தில் ஃபிளே ஆஃப் ஆட்டத்துக்குத் தகுதி பெறும். 27 புள்ளிகளுடன் உள்ள கோவா அணி அந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால் போட்டியிலிருந்து வெளியேறும்.

கடந்த நவம்பர் 17 அன்று ஐஎஸ்எல் போட்டி தொடங்கியது. மார்ச் 17 அன்று கொல்கத்தாவில் இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அளிப்பு

பயறுவகை, எண்ணெய் வித்து பயிா்களை விதைக்க அழைப்பு

மனநலம் குன்றிய சத்தீஸ்கா் இளைஞரை குணப்படுத்தி தாயிடம் ஒப்படைப்பு

திருமண நகைகள் திருட்டு - சிஆா்பிஎஃப் பெண் காவலா் விடியோவால் சா்ச்சை

அரசுப் பள்ளி மாணவா்கள் புத்தகப்பைகளை மைதானத்தில் வைத்து நூதன போராட்டம்

SCROLL FOR NEXT