செய்திகள்

'பசியால் பாகுபலியாக மாறிய தோனி'- ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் விளம்பரம்!

Raghavendran

சர்வதேசப் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலிக்கு வழிகாட்டி வருகிறார் மகேந்திர சிங் தோனி. சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து தொடரையும் வென்றது. இதில், தோனியின் வழிகாட்டுதல் பெரும் பங்களிப்பை அளித்ததாக சக வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதையடுத்து நடைபெறவுள்ள முத்தரப்பு தொடரில் இருந்து கேப்டன் விராட் கோலி, தோனி உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த முத்தரப்பு தொடரில் இந்திய அணி கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தோனி நடித்துள்ள சாக்லெட் நிறுவனத்தின் விளம்பரம் தற்போது அவரது ரசிகர்களிடையே  பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பழைய தோற்றத்ததில் தோனி இடம்பெற்றுள்ளது தான் இதற்கு முக்கியக் காரணம்.

கடந்த 2006-ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான தோனி, தனது அதிரடி ஆட்டத்தாலும், நீளமான தலைமுடியாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். பாகிஸ்தானில் நடைபெற்ற தொடரின் போது இந்திய அணியில் விளையாடிய தோனிக்கு அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரஃப் கூட ரசிகராக மாறினார். மேலும், இந்த ஸ்டைலை அப்படியே தொடருமாறு தோனிக்கு கோரிக்கையும் வைத்தார்.

அந்த நாட்களை நினைவுபடுத்தும் விதமாக அதே நீளமான தலைமுடியுடன் தோனி நடித்துள்ள இந்த சாக்லெட் விளம்பரம் இடம்பிடித்துள்ளது. அதில், பாகுபலி போன்ற தோற்றத்துடன் வரும் தோனி, சக வீரர்களிடம் அந்தப் போட்டி குறித்து ஆவசேமாகப் பேசும் விதமாக அமைந்துள்ளது.

நீளமான தலைமுடி பிடிக்காது என்று தனது மனைவி கூறிய காரணத்தால் மட்டுமே தலைமுடியை சிறியதாக அமைத்துக்கொண்டதாக பேட்டி ஒன்றில் தோனி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT