செய்திகள்

விராட் கோலி வரைந்து கொண்ட புது டாட்டூ! (புகைப்படம்)

சினேகா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், உலக கிரிக்கெட் சாதனைகளில் வெற்றியாளராகவும், ரசிகர்களின் மனம் கவர்ந்தவராகவும் திகழ்கிறார் விராட் கோலி. கிரிக்கெட் ரசிகர்கள் இவரைச் செல்லமாக 'கிங் கோலி' என்றே அழைக்கின்றனர். கோலி என்ன செய்தாலும் அதை செய்தியாக்க ஊடகங்கள் தயாராக இருக்கும். வெளிநாட்டு ஊடகங்களுக்கும் பிடித்த ஒரு இந்திய விஐபி விராட் கோலிதான்.

இந்நிலையில், அண்மையில் மும்பையில் உள்ள ஒரு டாட்டூ கடைக்குச் சென்று தனக்கு விருப்பமான ஒரு சின்னத்தை டாட்டூ போட்டுக் கொண்டார் கோலி என்ற செய்தி வட இந்திய ஊடகங்களில் வைரலானது. விளையாட்டு வீரர்களுக்கே உரிய ஃபிட்னஸ் விஷயங்களில் அக்கறை காட்டுவதுடன், விளம்பரங்களில் நடிப்பதாலும், உடல் அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவார் கோலி. தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகும். 

அந்த வரிசையில் சமீபத்தில் டாட்டூ கடையில் எடுக்கப்பட்ட விராட் கோலியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது.  விராட் கோலி ஒரு டாட்டூ பிரியர் என்பது அவரது ரசிகர்களுக்குத் தெரியும். உடலில் பல இடங்களில் டாட்டூ வரைந்து கொள்வது அவருக்கு மிகவும் பிடிக்கும்.

அண்மையில் மும்பை பாந்த்ராவில் உள்ள ‘ஏலியன்ஸ் டாட்டூ’ எனும் கடைக்குச் சென்ற கோலி, அங்கு புதிய டாட்டூ வரைந்து கொண்டார். அவரது உடலில் ஏற்கெனவே விதவிதமான டாட்டூக்கள் இடம்பெற்றுள்ளன.

சிவன் கைலாய மலையில் தவம் செய்யும் உருவம், அதன் பின்புலத்தில், மானஸரோவர் மலையும் டாட்டூவாக அவர் மீது உள்ளது. அடுத்து தனது அம்மா அப்பாவின் பெயர்களை பச்சை குத்தியிருக்கிறார் இந்தப் பாசக்கார மகன். இன்னுமொரு டாட்டூவில் ஒரு நாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஜெர்சி எண்ணை பதிய வைத்துள்ளார்.

கோல்டன் ட்ராகன், ஸ்கார்பியோ, சாமுராய் வீரன் என இதுவரை எட்டு டாட்டூக்களை தனது உடலில் வரைந்துள்ளார் கோலி.

அவரது இடது தோள்பட்டையில் ஏற்கனவே இருந்த ‘Gods eye’ என்ற டாட்டூவைச் சுற்றி மேலும் சில டிசைன்களை வரைந்துள்ளார் கோலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT