செய்திகள்

முகமது ஷமிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு: விசாரணைக்கு நிர்வாகக் குழு அறிவுறுத்தல்

DIN

இந்திய கிரிக்கெட் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசியு) விசாரணை நடத்த வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு அறிவுறுத்தியுள்ளது.
முகமது ஷமி-அவரது மனைவி ஹசின் ஜஹான் இடையே நடந்ததாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் பதிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முகமது ஷமி தன்னை ஏமாற்றுவதாகவும், அவரால் தாம் குடும்ப வன்முறைக்கு ஆளாகியிருப்பதாகவும் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
இந்நிலையில், ஷமி-ஹசின் இடையே நிகழ்ந்ததாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் பதிவு வெளியானதாக கூறப்படுகிறது. அதில் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது பாய் என்பவரிடம் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த அலிஷ்பா என்ற பெண் மூலமாக முகமது ஷமி பணம் பெற்றதாக ஜஹான் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, குறிப்பிட்ட அந்த விவகாரம் குறித்து விசாரிக்க வினாத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவுக்கு வினோத் ராய் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
முகமது ஷமி-ஹசின் ஜஹான் இடையே நிகழ்ந்ததாக கூறப்படும் உரையாடல் பதிவு கேட்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையில், முகமது பாய், அலிஷ்பா என்று குறிப்பிடப்படும் நபர்களின் விவரம்; அவர்கள் தரப்பிலிருந்து முகமது ஷமிக்கு பணம் வழங்கப்பட்டதா என்ற விவரம்; வழங்கப்பட்டது என்றால் அதற்கான காரணம்; ஆகியவை குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டும். இந்த விசாரணை அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து மட்டுமே நடைபெற வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT