முகப்பு
செய்திகள்

சுனில் நரைன் பந்துவீச்சு குறித்து மீண்டும் புகார்! ஐபிஎல்-லில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படுமா?

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சுனில் நரைனின் பந்துவீச்சு குறித்து நடுவர்கள் புகார் செய்தனர்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:29 PM
பகிர்:

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சுனில் நரைனின் பந்துவீச்சு குறித்து நடுவர்கள் புகார் செய்தனர்.

பிஎஸ்எல் போட்டியில், குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சந்தேகத்துக்கிடமாகப் பந்துவீசுவதாக சுனில் நரைன் மீது நடுவர்கள் புகார் அளித்துள்ளார்கள். இதன்விளைவாக லாகூர் அணிக்காக விளையாடும் 29 வயது நரைனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இனிவரும் பிஎஸ்எல் போட்டிகளில் அவர் பங்கேற்கவும் பந்துவீசவும் தடை விதிக்கப்படவில்லை. 

நரைன் குறித்த நடுவர்களின் அறிக்கை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும். முறைகேடான பந்துவீச்சைச் சரிசெய்வது குறித்த நடவடிக்கைகளில் அவர் மேற்கொள்ள நேரிடும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

பிஎஸ்எல் போட்டியில் லாகூர் அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. மீதம் ஒரு போட்டியில் மட்டும் விளையாடவுள்ளது. 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் சுனில் நரைனை கொல்கத்தா அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது. பிஎஸ்எல் போட்டியில் நடுவர்கள் அளித்த புகாரால் சுனில் நரைன் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்வதில் சிக்கல் எதுவும் ஏற்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →