செய்திகள்

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டித் தொடர்: அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி! 

பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்து வெளியேறினார்.

DIN

லண்டன்: பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்து வெளியேறினார்.

பெருமைமிகு ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதலாவது அரையிறுதிச் சுற்று ஆட்டம் ஒன்று சனிக்கிழமையன்று நடைபெற்றது.

இதில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் அகனே யமகுச்சியுடன் மோதினார். இப்போட்டியின் முதல் செட்டை சிந்து 21-19 என கைப்பற்றினார். அடுத்த செட்டை யமகுச்சி 21-19 என கைப்பற்றினார். இதனால் மூன்றாவது செட்டை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

பரபரப்பாக நடைபெற்ற மூன்றாவது செட்டின் இறுதியில் யமகுச்சி 21-18 என மூன்றாவது செட்டை கைப்பற்றினார். இதன்மூலம் 19-21, 21-18, 21-18 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த பி.வி.சிந்து தொடரைவிட்டு வெளியேறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT