உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள், ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே உலகக் கோப்பையில் பங்கேற்க இவ்விரு அணிகளும் தகுதிபெற்றுள்ள நிலையில், ஜிம்பாப்வேயில் அமைந்துள்ள ஹராரே மைதானத்தில் இப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான், புதிய உலக சாதனைப் படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் குறைந்த ஆட்டத்தில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளைக் கடந்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 44 ஒருநாள் போட்டிகளில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் இதுவரை அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.