முகப்பு
செய்திகள்

தாமதமாகக் கிடைத்த வெற்றி: இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி!

இந்திய அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து தனது கடைசி ஆட்டத்தை வென்றது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:36 PM
பகிர்:

இந்தியா-இங்கிலாந்து-ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கெனவே நடைபெற்ற 3 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்துவிட்டதால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு பறிபோய்விட்டது.

இந்தியா- இங்கிலாந்து மோதும் மற்றொரு லீக் போட்டி மும்பையில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 18.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க வீராங்கனை வியாட் மட்டும் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். இதர வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இந்திய அணித் தரப்பில் அனுஜா பாட்டீல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராதா யாதவ், பூணம் யாதவ், தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இந்திய அணி ஏற்கெனவே, ஆஸ்திரேலியாவுடன் இரு போட்டிகளிலும், இங்கிலாந்துடன் ஒரு போட்டியிலும் தோல்வியடைந்துவிட்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாது என்ற சூழ்நிலையில், இத்தொடரில் ஒரு வெற்றியையாவது பதிவு செய்யும் நோக்கில் இந்திய வீராங்கனைகள் களமிறங்கினார்கள். 

எளிமையான இலக்கை அடைய இந்திய அணி அதிகம் சிரமப்படவில்லை. தொடக்க வீராங்கனை மந்தனா 41 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கெளர் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் மந்தனாவுக்கு இறுதிவரை நல்ல இணையாக இருந்தார். இந்திய அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து தனது கடைசி ஆட்டத்தை வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.