'டெக் நெக்' என்பது என்ன? யாருக்கெல்லாம் இந்த பாதிப்பு ஏற்படும்?
மருத்துவரீதியாக பயன்படுத்தும் சொல்லான 'டெக் நெக்' என்பது பற்றி...
- அன்னா ஜோஸ்
இன்று நாம் பலரும் அதிகமாக ஸ்மார்ட்போன், கணிணி பயன்படுத்துகிறோம். வேலைரீதியாக குறிப்பாக ஐடி ஊழியர்கள் மணிக்கணக்கில் கணினியின் முன் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு 'டெக் நெக்' எனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
நாம் நீண்ட நேரம் நேராக நிமிர்ந்து உட்காராமல் தலை குனிந்து ஸ்மார்ட்போன் அல்லது கணினியைப் பார்க்கும்போது கழுத்து, தோள்களில் ஏற்படும் வலியைத் தான் 'டெக் நெக்' என்று கூறுகிறார்கள்.
Advertisement
Advertisement
இந்த 'டெக் நெக்' பற்றிய தவறான நம்பிக்கைகளுக்கு விளக்கமளிக்கிறார் கொச்சி லிஸி மருத்துவமனை முதுகெலும்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன்.
ஸ்மார்ட்போன் பயன்பாடு மட்டுமே கழுத்து வலியை ஏற்படுத்துகிறது
ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்ல, மடிக்கணினிகள், மானிட்டர்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதும் இவ்வகை கழுத்து மற்றும் தோள் வலியை ஏற்படுத்தும். நீண்ட நேரம் மோசமான தோரணையில் உட்காருவதால்(நேராக நிமிர்ந்து உட்காராததால்) இந்த நிலை ஏற்படுகிறது.
கழுத்து வலி மட்டுமே டெக் நெக்கின் ஒரே அறிகுறி
கழுத்து வலி மட்டுமின்றி தோள்பட்டை வலி, தசை இறுக்கம், தோள்பட்டைகளுக்கு இடையில் வலி போன்றவை இருக்கலாம்.
இளம் பணியாளர்களுக்கு மட்டுமே டெக் நெக் ஏற்படுகிறது
கணினியில் அதிக நேரம் வேலை செய்யும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஏற்படுகிறது. அதேபோல ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்தும் வயதானவர்கள், வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளுக்குக்கூட ஏற்படலாம். ஸ்மார்ட்போன், கணினியைப் பார்ப்பதைவிட நீங்கள் அமர்ந்திருக்கும் தோரணைதான் முக்கிய பங்கு வகிக்கிறது. நேராக நிமிர்ந்து உட்கார்ந்து இந்த சாதனங்களைப் பயன்படுத்தினால் கழுத்து வலியில் இருந்து தப்பிக்கலாம்.
டெக் நெக் என்பது வயதுடன் தொடர்புடையது
வயதானவர்கள் பலருக்கும் கழுத்து வலி ஏற்படுகிறது. 40, 50 வயதுகளில் உள்ள பலரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
நின்றுகொண்டு வேலை செய்தால் இந்த பிரச்னையைத் தவிர்க்கலாம்
உட்கார்ந்து வேலை செய்வதற்கு பதிலாக நின்றுகொண்டு வேலை செய்வது இதற்கு உதவாது. தலை நேராக இருக்க வேண்டும். முன்னோக்கி வளைந்திருக்கக் கூடாது. கண்ணுக்கு நேராக மானிட்டர் இருக்க வேண்டும். தலையை முன்னோக்கி வளைக்கும்போதும் கண் கீழே நோக்கி பார்க்கும்போதும் கழுத்து வலி ஏற்படும்.
Dr rajeev jayadevan explains about myths and facts on tech neck
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.