சருமப் பராமரிப்புக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? தோல் நிபுணர்கள் சொல்வதென்ன?
சருமப் பராமரிப்பு குறித்து தோல் நிபுணர்கள் கூறியது பற்றி...
- ரிஷப் தாக்கூர்
அழகு பராமரிப்பில் பலரும் இன்று தங்களுக்கு 'கண்ணாடி போன்ற சருமம்' (கிளாஸ் ஸ்கின்) வேண்டும் என்று தோல் நிபுணர்களை அணுகுகிறார்கள்.
சருமத்தில் துளைகள் இன்றி தெளிவாக, பளபளப்பாக கண்ணாடிபோல ஜொலிக்க வேண்டும் என்று சிகிச்சைகளுக்குக்கூடத் தயாராகிறார்கள். ஆனால், இந்த கிளாஸ் ஸ்கின் என்பது அழகியல் சார்ந்தது என்றும் சருமம் ஆரோக்கியமாக இருந்தாலே போதுமானது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.,
Advertisement
Advertisement
தோல் மருத்துவர் டாக்டர் நிவேதிதா "கிளாஸ் ஸ்கின் என்பது பெரும்பாலும் அழகியல் சார்ந்த விஷயம். அதேநேரம் ஆரோக்கியமான சருமம் என்பதுதேவையானது. சருமத்தில் துளைகள், அவ்வப்போது ஏற்படும் நிறமாற்றம் எல்லாம் இயல்புதான், அது ஆரோக்கியமானதுதான்" என்கிறார்.
இந்தியாவில் வெப்பம், மாசுபாடு, ஈரப்பதம், புற ஊதாக் கதிர்களின் தாக்கம் ஆகிய சுற்றுச்சூழல் பிரச்னைகள் இருக்கின்றன. எனவே, கிளாஸ் ஸ்கின்னுக்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும்போது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கிறார்.
புது தில்லி ஜிவிஷா கிளினிக் நிறுவனர் மற்றும் தோல் மருத்துவரான டாக்டர் அக்ரிதி குப்தா இதுபற்றி கூறியதாவது:
பொதுவாக இந்தியர்களின் சருமம் பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியது. எனவே சருமத்தில் அமிலம் கலந்த பல தயாரிப்புகளைப் பயன்படுத்துவது, சருமத்தை உரிக்கும் பேஸ் பேக்குகளைப் பயன்படுத்துவது உண்மையில் சருமத்தின் நிலையை மோசமாக்கும்.
இணையத்தில் வைரலாகும் சருமப் பராமரிப்புப் பொருள்களை அனைவரும் பயன்படுத்துவது தவறானது. ரெட்டினால், கிளைகோலிக் அமிலம், சாலிசிலிக் அமிலம், வைட்டமின் சி - இவை அனைத்தும் சில தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக சருமம் சிவந்துபோவது, வறட்சி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம்.
சருமப் பராமரிப்புக்கு தோல் மருத்துவர்கள் சொல்வதென்ன?
சருமப் பராமரிப்புக்கு பெரிதாக எதுவும் மெனக்கெட வேண்டியதில்லை. க்ளென்சர், மாய்ஸ்சரைசர், சன்ஸ்கிரீன் ஆகிய 3 பொருள்கள் மட்டுமே போதுமானது என்று கூறுகிறார்கள்.
"ஆரோக்கியமான சருமம் என்பது பொலிவு என்பதல்ல, எந்தவொரு அசௌகரியமும் இல்லாத சருமம் ஆகும். சில அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தும்போது இறுக்கமாக உணரக் கூடாது, எரிச்சல் தருவதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தாலே போதுமானது.
ஒரு சீரம் செய்வதைவிட நல்ல தூக்கம், மன அழுத்தமின்மை, உடலில் நீர்ச்சத்து, உணவுப்பழக்கவழக்கம், சன்ஸ்க்ரீன் ஆகியவை சருமத்திற்கு அதிக நன்மைகளைச் செய்யும். அழகு என்பது சருமத்தின் மேல்புறத்தில் பூசுவது அல்ல, உடலின் உள்ளிருந்து கட்டமைக்கப்படுகிறது" என்கிறார் டாக்டர் நிவேதிதா.
தமிழில்: எம். முத்துமாரி
what to do for skincare, dermatologists say
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.