FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிரியங்கா சோப்ராவின் அழகு ரகசியம் இதுதான்! அவரது தாய் சொன்னது..!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் சருமப் பராமரிப்பு பற்றி...

31 வினாடிகள் முன்பு
பிரியங்கா சோப்ரா - ANI
பகிர்:

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் சருமப் பராமரிப்பு குறித்து அவருடைய தாயார் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

தங்கள் அழகின் ரகசியம் குறித்து பிரபலங்கள் பலரும் அவ்வப்போது நேர்காணல்களில், சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் சருமப் பராமரிப்பு குறித்து ஒரு நேர்காணலில் அவருடைய தாயார் மது சோப்ரா பேசியுள்ளார்.

Advertisement

Advertisement

அந்த விடியோவில், "நான் என்னுடைய சருமப் பராமரிப்புக்கு பேஸ் வாஷ் அல்லது சோப்பு என எதையும் பயன்படுத்துவதில்லை. என்னுடைய சருமத்தில் இறந்த செல்களை நீக்குவதற்கு ஸ்க்ரப் செய்கிறேன். இது வயதான தோற்றத்தில் இருந்து பாதுகாக்கிறது. அதேநேரத்தில் சருமத்தில் கரும்புள்ளி, பருக்கள், வடுக்கள் என எதுவும் வராமல் ஆரோக்கியமாக பார்த்துக்கொள்கிறேன். பிரியங்காவும் நானும் இதைத்தான் பின்பற்றுகிறோம்" என்றார்.

மேலும் அவர் ஸ்க்ரப் செய்வது பற்றியும் விளக்கமளிக்கிறார்.

"கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன், அத்துடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட க்ரீம், சிறிது கெட்டித் தயிர், மஞ்சள், குளிர்ந்த பால் கொஞ்சம் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் வைத்திருந்து பின்னர் கழுவலாம். மிகவும் வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இது மிகச்சரியானதாக இருக்கும். என்னுடையதும் வறண்ட சருமம்தான். இந்த ஸ்க்ரப் கலவை ஒரு மாஸ்க் போன்று இருக்கும். சோர்வான சருமத்தில் இதனைச் செய்யும்போது நீங்கள் வித்தியாசத்தைக் காணலாம். அதேநேரத்தில் கண்களுக்கு கீழே உள்ள தோல் மிகவும் மென்மையானது. அங்கு எதையும் தேய்க்க வேண்டாம். இந்திய பாரம்பரிய முறைப்படி அழகை பராமரிக்கலாம்" என்றார்.

summary

This is Priyanka Chopra beauty secret and her daily routine! her mother said...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments