ஊடகங்களைப் போல் நாங்களும் அமைதியாக இருக்க வேண்டுமா? பிரியங்கா கேள்வி!
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு கோபமாக பதிலளித்த பிரியங்கா காந்தி...
உங்களைப் போல் நாங்களும் அமைதியாக இருக்க வேண்டுமா என்று காங்கிரஸ் பொதுச் செயலரும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி புதன்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவா்கள் மீதான காவல் துறையின் நடவடிக்கை உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அரசு தரப்பில் அமித் ஷா பதிலளிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.
Advertisement
Advertisement
ஆனால், மாணவா்கள் மீது பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யாா்?, துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மாணவா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி மன்னிப்புக் கோர வேண்டும், அயோத்தி ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரம் குறித்து மோடி விளக்கமளிக்க வேண்டும், ஆகிய மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் விதித்துள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு வந்த பிரியங்கா காந்தியிடம், இன்றும் முடக்கப் போகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு கோபத்துடன் பதிலளித்த பிரியங்கா காந்தி, “உங்களைப் போல் நாங்களும் அமைதியாக இருக்க வேண்டுமா?. மாணவர்கள் மீது தடியடி நடத்தும்போதும், அவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தும்போதும், அவர்கள் மீது ஏகே 47 துப்பாக்கிகளைப் பயன்படுத்தும்போதும் பாஜகவால் பதில் சொல்ல முடியாதா?. இதற்கு யார் காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?. உங்களைப் போல் (ஊடகங்கள்) நாங்களும் அமைதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.
Should we also remain silent like the media? Priyanka asks!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.