FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பிரியங்கா காந்தி விமர்சித்தது பற்றி...

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 2:42 pm IST
பிரியங்கா காந்தி - ANI
பகிர்:

நாடாளுமன்றத்தின் கடைசி நாளான இன்று வந்தே மாதரம் பாடத்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தார் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை நிறைவுபெற்றது.

இந்த கூட்டத்தொடர் முழுவதும், தில்லியில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்? என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

இதனிடையே, நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா, நாடாளுமன்றத்துக்கு நாள்தோறும் வருவதாகவும், தனது அறையில் அமர்ந்து கூட்டத்தொடரை கவனித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தான் விவாதத்துக்கு தயார் என்றும், எதிர்க்கட்சிகள் நேரத்தை தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தின் கடைசி நாளான இன்று காலை மக்களவைக்கு பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் வருகை தந்தனர். ஆனால், கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் கூட்டத்தொடரை முடிப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசுகையில் பிரியங்கா காந்தி தெரிவித்திருப்பதாவது:

”வந்தே மாதரம் பாட மட்டுமே உள்துறை அமைச்சர் இன்று வந்தார். முழு கூட்டத்தொடரும் நடைபெற்று முடிந்துவிட்டது. ஆனால், பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் என யாருமே இதில் கலந்துகொள்ளவில்லை. அப்படியிருக்கையில், இந்த ஜனநாயகமும் நாடாளுமன்றமும் எவ்வாறு செயல்பட முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுடன் பேசுகையில்,

“நாடாளுமன்றத்துக்கு அறையில் அமருவதற்கா வருகிறீர்கள்? அங்கு அமர்ந்து கூட்டத்தொடரை கவனித்தால் போதுமா? அவைக்கு வந்து எங்களின் பேச்சை கவனித்து பதிலளியுங்கள்” எனத் தெரிவித்தார்.

summary

Amit Shah came to Parliament only to sing 'Vande Mataram'! – Priyanka Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments