FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா

சோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தது குறித்து...

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 9:33 pm IST
அமித் ஷா - பிடிஐ
பகிர்:

சோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஆக. 16) தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்திற்குட்பட்ட நிம்பஹேராவில், முன்னாள் பிரதமரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளன்று, 21 அடி உயரமுள்ள அவரது சிலையை அமித்ஷா திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:

Advertisement

Advertisement

''காங்கிரஸின் வெட்கமற்ற தன்மையைப் பாருங்கள். காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட்டுக்கொண்டிருந்தது. அப்பாடல் பாடப்பட்டுக் கொண்டிருந்தபோது, ​​காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவரிடம் பாடுவதை நிறுத்துமாறு கூறினார். நாமெல்லாம் அதைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தோம்.

சோனியா காந்தி அவர்களே, 140 கோடி மக்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் செய்த இந்த பாவத்தை இந்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். 'வந்தே மாதரம்' தேசிய கீதத்தை முழுமையாக்காமல் பாதியில் விட்டுவிடுவதைப் பற்றி யாராவது எப்படி கனவு கூட காண முடியும்? காங்கிரஸ் கட்சியினர் வெட்கப்பட வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.

காங்​கிரஸ் தலை​மையக​மான இந்​திரா பவனில் நேற்று சுதந்திர தினவிழாவில் கொடியேற்றுவதற்கு முன்பு வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவிடம் சைகை செய்தார். பின்னர் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடி முடிக்கப்பட்ட பின்னர், கார்​கே, தேசி​யக் கொடியை ஏற்றி சிறப்​புரை​யாற்​றி​னார்.

இந்​நிலை​யில், வந்தே மாதரம் பாடலை காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்தி அவம​தித்​து​விட்​ட​தாக பாஜக குற்​றம் சாட்டியுள்ளது.

summary

The people of the country will not forgive Sonia Gandhi Amit Shah

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments