ரோபோ வாக்யூம் க்ளினீர்கள் எப்படி வேலை செய்கின்றன?
ரோபோ வாக்யூம் க்ளினீர்கள் எப்படி வேலை செய்கின்றன என்பது பற்றி..
வீட்டின் தரைப் பகுதியை சுத்தமாக வைத்திருப்பது, குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மிகவும் சவாலான பணிதான். அதிக நேரம் செலவிடும் வகையிலானதும்கூட.
வீட்டின் அனைத்து அறைகளையும் ஒவ்வொரு நாளும் பெருக்கி சுத்தம் செய்வது, துடைப்பது என்பது தலையாய பணிதான். ஆனால், ஒரே ஒரு ரோபோ வாக்யூம் க்ளீனர் வீட்டில் இருந்தால், அதுவே நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டை பெருக்கி சுத்தம் செய்து விடும் என்றால் எப்படி இருக்கும்?
சில வாக்யூம் கிளீனர்கள் மூலை முடுக்கெல்லாம் சென்று ஒளிந்துகொண்டிருக்கும் அழுக்குகளையும் விடாப்பிடியான கறைகளையும் நீக்குகிறதாம். சில மாடல்கள் பெருக்குவதோடு, துடைக்கும் பணியையும் செய்கிறதாம்.
Advertisement
Advertisement
அதாவது ரோபோ வாக்யூம் கிளீனர்கள், ஆன் செய்துவிட்டால் வீடு முழுக்கப் பெருக்கி சுத்தப்படுத்திவிட்டு, தானாகவே அதன் இடத்தில் போய் இருந்து கொள்கிறது.
சில வாக்யூம் க்ளீனர்கள் செல்போன் செயலி மூலம் கட்டுப்படுத்தலாம், அதிக குப்பைகளை இழுக்கும் திறன், தரையை துடைக்கும் வசதி, பல வகைகளில் சுத்தப்படுத்தும் திறன் கொண்டதாகவும் வருகிறது. பெரிய வீடுகள் என்றால் அதிக நேரம் பாட்டரி தாங்கம் திறனுடன் ரூ.15 ஆயிரம் முதல் பல ஆயிரம் வரையில் மாடலுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வளர்ப்புப் பிராணிகள் இருந்தார் கார்ப்பெட்களில் இருக்கும் முடிகளை அகற்றும் வசதியும் தனியாக அமைந்துள்ளது.
இதனுடன் தரையை துடைப்பதுடன் காய வைக்கும் ஆற்றல்
லேசர் நேவிகேஷன்
கீழே விழாமல் வேலை செய்யும் ஆற்றல் கொண்டது என பல வகைகளில் விதவிதமாக வருகின்றன.
பெரிய இட வசதி இருந்து, தரையில் அதிகம் பொருள்களை வைத்திருக்காமல் எப்போதும் வீடு அடுக்கி வைத்தது போல இருந்தால் இந்த ரோபோடிக் வாக்யூம் கிளீனர் சிறந்த தேர்வுதான் என்கிறார்கள் பயன்படுத்திப் பார்த்தவர்கள்.
How do robot vacuum cleaners work?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.