தொடர் கனமழை! வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தல்!
கனமழை காரணமாக ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது குறித்து...
குருகிராமில் பெய்துவரும் கனமழை காரணமாக ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அரசு திங்கள்கிழமை (ஆக. 24) அறிவுறுத்தியுள்ளது.
தில்லி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் கனமழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணா மாநிலம், குருகிராமில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள பெருநிறுவன அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் போன்றவற்றை நாளை (ஆக. 25) வீட்டிலிருந்து பணிபுரிய ஊழியர்களை அனுமதிக்குமாறு மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நடவடிக்கையானது போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, சாலை, வடிகால் சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகளை இடையூறு இன்றி மேற்கொள்ள உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த கனமழையால் பாதிக்கப்பட்டு, நான்கு சக்கர வாகனங்கள் சாலையின் நடுவே நின்றுபோதல், இருசக்கர வாகனங்கள் இடுப்பளவு நீரில் தள்ளிக்கொண்டு செல்லப்படுதல் போன்ற விடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
The government has advised employees to work from home on Monday (Aug. 24) due to the heavy rainfall in Gurugram.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.