நான் விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர் என்பது இஷான் கிஷனுக்குத் தெரியாது: சூர்யவன்ஷி
தான் விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர் என்பது இஷான் கிஷனுக்குத் தெரிந்திருக்கவில்லை என இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
தான் விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர் என்பது இஷான் கிஷனுக்குத் தெரிந்திருக்கவில்லை என இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான வைபவ் சூர்யவன்ஷி துலீப் டிராபியில் ஈஸ்ட் ஸோன் அணிக்காக விளையாடினார். இந்தப் போட்டியில் ஈஸ்ட் ஸோன் அணி இன்னிங்ஸ் மற்றும் 210 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியால் அணிக்கு தனது பேட்டிங் மூலம் சிறந்த பங்களிப்பை வழங்க முடியவில்லை. அவர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், பந்துவீச தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அவர், இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தான் விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர் என்பது இஷான் கிஷனுக்குத் தெரிந்திருக்கவில்லை என இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நீங்கள் எந்த ஒரு பேட்டரை கேட்டாலும், அவர்களுக்குப் பந்துவீச்சில் ஈடுபடுவது பிடிக்கும். அதேபோல, பந்துவீச்சாளர்களுக்கும் பேட்டிங் செய்வது பிடிக்கும். எதிரணி விக்கெட்டினை விடாமல் விளையாடிக் கொண்டிருந்ததால், நான் 2-3 ஓவர்கள் வீச அழைக்கப்பட்டேன். என்னைப் பந்துவீச அழைத்து ரிஸ்க் எடுத்தார் இஷான் கிஷன். ஆனால், நான் விக்கெட் வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளர் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
என்னுடைய மனதில் இருந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நான் நன்றாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுகள் எடுத்தாலும், எனக்கு மூன்று ஓவர்கள்தான் கிடைக்கும். அதனால், சிறந்த முறையில் பந்துவீச முயற்சித்தேன். பந்துவீச்சின்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஏனெனில், அணிக்கு என்னால் பேட்டிங்கில் பங்களிப்பை வழங்க முடியவில்லை. பந்துவீச்சில் என்னுடைய பங்களிப்பை வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியளித்தது என்றார்.
Young player Vaibhav Suryavanshi stated that Ishan Kishan was unaware he was a wicket-taking bowler.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.