FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெற வேண்டும்: முன்னாள் வீரர்

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜூலை 2026, 7:09 pm IST
வைபவ் சூர்யவன்ஷி - படம் | பிசிசிஐ
பகிர்:

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடியதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அண்மையில், அவர் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் அறிமுகமானார்.

இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற வேண்டும் எனவும், ரோஹித் சர்மாவுடன் அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஃபரோக் என்ஜினியர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற வேண்டும். ரோஹித் சர்மா தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடினால், அவருடன் சூர்யவன்ஷி தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட வேண்டும். மூன்றாவது வீரராக விராட் கோலியும், நான்காவது இடத்தில் ஷுப்மன் கில்லும் களமிறங்க வேண்டும்.

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்குள் சூர்யவன்ஷியை கொண்டுவர இதுவே சரியான நேரம் என நினைக்கிறேன். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை ஏன் பலரும் வெவ்வேறாகப் பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை. இரண்டு வடிவிலான போட்டிகளிலுமே சூர்யவன்ஷியால் ரன்கள் குவிக்க முடியும். அவரால் இந்திய அணிக்காக போட்டிகளை வென்று கொடுக்க முடியும். அணிக்கு அவர் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தினால், அடுத்தடுத்து களமிறங்கும் வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்றார்.

அண்மையில் நிறைவடைந்த ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. இந்தத் தொடரில் இரண்டு அரைசதங்களுடன் 151 ரன்கள் எடுத்த வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

A former Indian player has stated that young player Vaibhav Suryavanshi should be included in the Indian ODI squad.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments