யு-19 ஒருநாள் தொடர் அணியில் அன்வய் திராவிட், ஆர்யவீர் சேவாக்
பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ள இந்திய அணியில், ஜாம்பவான்கள் ராகுல் திராவிட், வீரேந்திர சேவாக் ஆகியோரின் மகன்களான அன்வய் திராவிட் (17), ஆர்யவீர் சேவாக் (18) சேர்க்கப்பட்டுள்ளனர்.
பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ள இந்திய அணியில், ஜாம்பவான்கள் ராகுல் திராவிட், வீரேந்திர சேவாக் ஆகியோரின் மகன்களான அன்வய் திராவிட் (17), ஆர்யவீர் சேவாக் (18) சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆர்யவீர் சேவாக்கிற்கு இது அறிமுக வாய்ப்பாக இருக்க, அன்வய் திராவிட் இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். கடந்த மாதம் இலங்கையுடனான தொடரில் விளையாடிய அவர், இரு இன்னிங்ஸ்களில் 14 மற்றும் 87 ரன்கள் அடித்தார்.
செப்டம்பரில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய யு-19 அணி, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர், 2 ஆட்டங்கள் கொண்ட முதல்தர கிரிக்கெட் தொடரில் இந்திய யு-19 அணியுடன் விளையாடவுள்ளது. இந்த டூர் செப்டம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது.
Advertisement
Advertisement
ஒருநாள் ஆட்டங்களும், தொடக்க முதல்தர ஆட்டமும் ராஜ்கோட்டில் நடைபெறும் நிலையில், 2-ஆவது முதல்தர ஆட்டம் அகமதாபாதில் நடைபெறவுள்ளது. இதில் ஒருநாள் தொடருக்காக லக்ஷயா ராய்சந்தனி தலைமையில் ஒரு அணியையும், முதல்தர தொடருக்காக யஷ்வர்தன் செளஹான் தலைமையில் மற்றொரு அணியையும் பிசிசிஐ தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
அன்வய் மற்றும் ஆர்யவீர் இருவருமே, ஒருநாள் தொடருக்கான அணியில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.