FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பெளலர்களுக்கு எமன் வீரேந்திர சேவாக்! வைரலாகும் ரசிகர்களின் பதிவு

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் எமன் வேடமணிந்ததற்கு குவியும் பாராட்டுகள் குறித்து...

26 வினாடிகள் முன்பு
எமன் வேடத்தில் விரேந்திர சேவாக் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீவிரேந்திர சேவாக் எமன் வேடத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் எதிரணி பெளலர்கள், சேவாக்கை பார்க்கும் விதம் இவ்வாறுதான் இருக்கும் என அவரின் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரைஸ் & ஃபால் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தொகுத்து வழங்குகிறார்.

Advertisement

Advertisement

15 பிரபலங்கள் பங்கேற்றிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பல அதிரடி டாஸ்க்குகள் வைக்கப்பட்டுள்ளன. உயிரை துச்சமாக நினைத்து போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களை மேலும் சோதிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக இந்த வாரம் எமதர்மன் வேடமணிந்துள்ளார் சேவாக்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேவாக் பகிர்ந்துள்ளார். இதில், கிரிக்கெட் ரசிகர்கள் பலர் சேவாக்கின் தோற்றத்தை புகழ்ந்து வருகின்றனர்.

இந்திய அணிக்காக விளையாடிக்கொண்டு இருந்த காலகட்டத்தில், எதிரணி பெளலர்களுக்கு சேவாக், எமனைப்போன்றுதான் காட்சி அளித்திருப்பார் என கிரிக்கெட் வீரர்கள் உள்பட ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

வைரலாகும் பதிவுகள்...
summary

Former cricketer virender Sehwag in the role of Yama

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments