எமனாக மாறிய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்!
கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் எமதர்மன் வேடமணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் எமதர்மன் வேடமணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
கிரிக்கெட் உலகின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களைப் பட்டியலிட்டால் அதில் முதல் 3 இடங்களுக்குள் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் பெயர் நிச்சயம் இடம்பெறும்.
எந்தவிதமான போட்டியாக இருந்தாலும், முதல் பந்தில் இருந்தே அவரது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கிவிடுவார். பிரபல பந்துவீச்சாளர்கள் கூட அவரது ஆட்டத்தால் மிரள்வார்கள்.
Advertisement
Advertisement
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் தனியே கிரிக்கெட் பயிற்சிப் பள்ளி நடத்தி வரும் சேவாக், ஐபிஎல் தொடர்களில் வர்ணனையாளராகவும் அவ்வப்போது தோன்றுவார்.
மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் சேவாக், தற்போது ரைஸ் அண்ட் ஃபால் சீசன் 2' என்ற ரியாலிட்டி ஷோவைத் தொகுத்து வழங்குகிறார்.
அதில், ஒரு பகுதியாக எமதர்ம ராஜா வேடமணிந்து அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.
சேவாக் வெளியிட்ட பதிவில், ”டெத் ஓவர்களா? நான் பேட்டிங் செய்ய வரவில்லை. அனைவரது வாழ்க்கையின் ஸ்கோர்கார்டைப் பார்க்க வெளியே வந்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Photos of cricketer Virender Sehwag dressed as Yama (the God of Death) have gone viral on the internet.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.