FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆஸி.க்கு எதிரான யு-19 இந்திய அணியில் இடம்பிடித்த டிராவிட், சேவாக் மகன்கள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

15 வினாடிகள் முன்பு
ராகுல் டிராவிட். உள்படம்: அன்வே டிராவிட்.
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், இந்த தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஆகஸ்ட் 27) அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை லக்‌ஷ்யா ராய்சந்தனியும், டெஸ்ட் தொடருக்கான அணியை யஷ்பர்தன் சிங் சௌகானும் கேப்டனாக வழிநடத்தவுள்ளனர்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்திர சேவாக்கின் மகன்கள் இடம்பெற்றுள்ளனர். சேவாக்கின் மகன் ஆர்யவீர் முதல் முறையாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், டிராவிட்டின் மகன் அன்வே கடந்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றார். இவர்கள் இருவரும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் தொடருக்கான யு-19 இந்திய அணி விவரம்

லக்‌ஷ்யா ராய்சந்தனி (கேப்டன்), யஷ்பர்தன் சௌகான் (துணைக் கேப்டன்), ராஜத் பாகல், ஆர்யவீர் சேவாக், வி.கே.வினீத், குஷாக்ரா ஓஜா, அர்ஜூன் ராஜ்புட், மனல் சௌகான், அன்வே டிராவிட், வி.யஷ்வீர், ரோஹித் யாத்வ், ஷாவின் வினோத், மோஹித் உல்வா, சிகுருபதி வெங்கடா, காவ்யா படேல்.

டெஸ்ட் தொடருக்கான யு-19 இந்திய அணி விவரம்

யஷ்பர்தன் சௌகான் (கேப்டன்), லக்‌ஷ்யா ராய்சந்தனி (துணைக் கேப்டன்), சாகர் விர்க், குஷாக்ரா ஓஜா, மனல் சௌகான், குஷ் படேல், மானவ் கிருஷ்ணா, அபிபிரே பிஸ்வாஸ், ரோஹித் யாதவ், இஷான் ஓம், அயன் அக்ரம், பிரனாவ் ராகவேந்திரா, பியான்ஷு சிங், மோஹித் உல்வா, ஆர்யன் யாதவ்.

summary

The BCCI has announced the Indian Under-19 squad for the ODI series against Australia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments