செய்திகள்

ஐசிசி தலைவராக சஷாங்க் மனோகர் மீண்டும் தேர்வு!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இந்தியாவின் சஷாங்க் மனோகர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...

எழில்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இந்தியாவின் சஷாங்க் மனோகர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) வாரியம் சாரா முதல் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த சஷாங்க் மனோகர் போட்டியின்றி 2016-ம் வருடம் மே மாதம் தேர்வு செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியிலிருந்து விலகிய அடுத்த இரு நாள்களில் அவர் இந்தப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சஷாங்க் மனோகர் ஐசிசி தலைவராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

எனினும் கடந்த வருடம் மார்ச் மாதம், தனிப்பட்ட காரணங்களுக்காகத் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். அதே வருடம் ஜூனில் நடைபெற்ற ஐசிசி கூட்டம் வரை சேர்மன் பதவியில் நீடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். ஆனால், நிர்வாகம் மற்றும் வருவாய் பகிர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் ஐசிசிக்கு வெற்றி கிடைத்ததால் மனோகரே ஐசிசி தலைவராக நீடிக்கவேண்டும் என்று உறுப்பினர்கள் விரும்பினார்கள். ஐசிசியின் இயக்குநர்கள், ஐசிசியில் உறுப்பினராக இருக்கும் கிரிக்கெட் வாரியங்களின் ஆதரவு சஷாங்க் மனோகருக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டார். தனது பதவிக்காலம் (2018 ஜூன் வரை) முடியும் வரை அந்தப் பதவியில் நீடிக்க முடிவெடுத்தார். 

இந்நிலையில் ஐசிசி தலைவராக சஷாங்கர் மனோகர் மீண்டும் தேர்வாகியுள்ளார். அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

SCROLL FOR NEXT