பிரெஞ்ச் ஓபன்: சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் செரீனா
பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் முன்னாள் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் நீண்ட நாள்களுக்கு பின்னர் களம் காண்கிறார்.
பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் முன்னாள் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் நீண்ட நாள்களுக்கு பின்னர் களம் காண்கிறார்.
23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரான செரீனா நீண்ட நாள்களாக தொடர்ந்து உலகின் முதல் நிலை வீராங்கனை அந்தஸ்தையும் தக்க வைத்திருந்தார். இதற்கிடையே இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் கர்ப்பம் தரித்திருந்த போதே சாம்பியன் பட்டம் வென்றார். அதுவே அவர் அந்த சீசனிஸ் பங்கேற்ற கடைசி போட்டியாகும். மேலும் செப்டம்பர் மாதம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பல மாதங்கள் போட்டிகளில் பங்கேற்காத நிலையில் தற்போது தரவரிசைப் பட்டியலில் அவர் 454-வது இடத்தில் உள்ளார்.
கடந்த மார்ச் மாதம் மியாமி ஓபன் போட்டியில் விளையாடிய செரீனா முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினார். தற்போது மீண்டும் களம் காணும் அவர் பிரெஞ்சு ஓபன் போட்டியில் விளையாட உள்ளார். அவர் விளையாடாத நிலையில் மரியா ஷரபோவா, வோஸ்னியாக்கி, ஜெலனா ஓஸபென்கோ, லோன் ஸ்டெபன்ஸ், ஆகியோர் களத்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். ஏற்கெனவே 2002, 2013, 2015-ஆம் ஆண்டுகளில் செரீனா பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.