முகப்பு
செய்திகள்

முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு வாக்குரிமை: மாநில சங்கங்கள் அதிருப்தி

முன்னாள் இந்திய வீரர்களை இணைத்து புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என பிசிசிஐ நிர்வாகிகள் குழு உத்தரவிட்டுள்ளதால், மாநில சங்கங்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Updated On : 22 மே, 2018 at 1:49 AM
பகிர்:

முன்னாள் இந்திய வீரர்களை இணைத்து புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என பிசிசிஐ நிர்வாகிகள் குழு உத்தரவிட்டுள்ளதால், மாநில சங்கங்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக சிஓஏ சார்பில் அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
மாவட்ட சங்கங்கள், கிளப்புகளுக்கு வாக்குரிமையுடன் பொதுக்குழுவில் உறுப்பினர்களாக கொண்டுள்ள மாநில சங்கங்கள் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு வாக்குரிமை அளித்து புதிய பட்டியலை தேர்தல் நடப்பதற்கு முன்பு கண்டிப்பாக தயாரிக்க வேண்டும். மேலும் முன்னாள் வீரர்களின் பெயர்ப்பட்டியலை அனுப்ப வேண்டும் . 
அனைத்து மாநில சங்கங்களுக்கு நிர்வாகியாக இருப்போர் புதிய சட்டவரையறை கடைபிடிக்கும் வரை அந்தந்த பதவியில் நீடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இது சில மாநில சங்கங்களை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது. 
அரசியல் சட்டப்படி சங்கத்தை அமைப்பதற்கான அடிப்படை உரிமையில் தலையிடுவதாகும் சிஓஏ உத்தரவு. தனி நபர் வாக்குகள் இல்லாத மாநில சங்கங்கள் முன்னாள் வீரர்களை வெறும் உறுப்பினர்களாக நியமித்தால் போதும் என முன்பு கூறப்பட்டது. தற்போது அவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டியுள்ளது. இதனால் பெங்கால் கிரிக்கெட் சங்கம், மும்பை கிரிக்கெட் சங்கம் பாதிக்கப்படும் என பெயர் கூற விரும்பாத மாநில சங்க நிர்வாகி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.