செய்திகள்

இத்தாலி ஓபன்: ரஃபேல் நடால் 8-வது முறையாக சாம்பியன்

DIN

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால் 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
ரோம் நகரில் இத்தாலி ஓபன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒற்றையர், இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. மகளிர் பிரிவில் விட்டோலினா நேர் செட்களில் உலகின் முதல்நிலை வீராங்கனை ஹலேப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
இரவில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நடாலும், நடப்புச் சாம்பியன் அலெக்சாண்டர் வெரேவும் மோதினர். முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் நடால் எளிதாக வென்றார். எனினும் இரண்டாவது செட்டில் 6-1 என வெரேவ் அதிரடியாக ஆடி வென்றார். இதனால் கடைசி செட்டில் பரபரப்பான நிலை காணப்பட்டது. இடையில் மழை பெய்த போது, 1-3 என்ற புள்ளிக்கணக்கில் நடால் பின்தங்கி இருந்தார். மழை நின்ற பின் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில் நடால் தனது முழு ஆட்டத்திறனையும் வெளிப்படுத்தி 6-3 என செட்டைக் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் இத்தாலி ஓபன் போட்டியில் அவர் 8-வது முறையாக வென்றுள்ளார். இதன் மூலம் பிரெஞ்சு ஓபன் போட்டியை நடால் உற்சாகமாக எதிர்கொள்கிறார். இந்த வெற்றி மூலம் களிமண் தரையில் தான் புலி என்பதை நடால் மீண்டும் நிருபித்துள்ளார்.

மீண்டும் உலகின் முதல்நிலை வீரர்

ஸ்பெயினின் ரஃபேல் நடால் மீண்டும் உலகின் முதல்நிலை வீரர் அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டார்.
உலகின் முதல்நிலை வீரராக இருந்த நடால், பார்சிலோனா ஓபன், போட்டியில் தோல்வியைத் தழுவியதால் ஏடிபி தரவரிசையில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து ரோஜர் பெடரர் தரவரிசையில் முதலிடத்தை அடைந்தார்.
கடந்த 1 வாரமாக பெடரர் உலகின் முதல்நிலை வீரராக திகழ்ந்தார். இதற்கிடையே ரோமில் நடந்த இத்தாலி ஓபன் போட்டியில் நடால் 8-வது முறையாக சாம்பியன பட்டம் வென்றார்.
இதன் மூலம் அவர் மீண்டும் முதல்நிலை வீரர் அந்தஸ்தை பெற்றுள்ளார். முதல் பத்து இடங்களில் உள்ள வீரர்கள், புள்ளிகள் விவரம்:
ரஃபேல் நடால் (8770), ரோஜர் பெடரர் (8670), அலெக்சாண்டர் வெரேவ் (5615), மரின் சிலிக் (4950), கிரிகோர் டிமிட்ரோவ் (4870), மார்ட்டின் டெல் பெட்ரோ (4450), கெவின் ஆண்டர்சன் (3635), டொமினிக் தீம் (3195), டேவிட் கோபின் (3020), ஜான் இஷ்னர் (2955). எனினும் முன்னாள் முதல் நிலை வீரரான ஜோகோவிச் 18-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பிரதேசம்: 4 சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

நெல் கொள்முதல் லஞ்சத்தை எதிா்த்தோரை கைது செய்வதா?: அன்புமணி கண்டனம்

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

SCROLL FOR NEXT