செய்திகள்

பிரெஞ்ச் ஓபன் போட்டி: நடாலுக்கு சவாலை ஏற்படுத்தும் வெரேவ்

DIN

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரர் நடாலுக்கு, ஜெர்மனியன் அலெக்சாண்டர் வெரேவ் கடும் சவாலை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் நடந்த இத்தாலி ஓபன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் வெரேவே கடுமையாக போராடி வென்றார் நடால். ஆனால் மாட்ரிட் ஓபன் போட்டியில் வெரேவ் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
பிரெஞ்சு ஓபன் போட்டிகள் வரும் 27-ஆம் தேதி தொடங்குகின்றன. இதில் 10 முறை சாம்பியன் பட்டம் வென்ற நடால் தற்போது 11-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளார். ஆனால் 21 வயதான வெரேவ் அவருக்கு சவாலை உண்டாக்குவார் எனத்தெரிகிறது. இத்தாலி ஓபன் போட்டியில் நடாலுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கடந்த 81 ஆண்டுகளாக ஜெர்மனி வீரர் எவரும் வெல்லவில்லை. அந்த குறையைப் போக்கும் வகையில் வெரேவ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் ஷரபோவா...

2 முறை பிரெஞ்ச் ஓபன் உள்பட 5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்ற ரஷியாவின் ஷரபோவா மீண்டும் பிரெஞ்சு ஓபனில் களம் காண்கிறார். போதை மருந்து பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் 15 மாதங்கள் அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தடைக்காலம் முடிவடைந்து மாட்ரிட் ஓபன், இத்தாலி ஓபன் உள்பட பல்வேறு போட்டிகளில் அவர் பங்கேற்று வருகிறார். பிரெஞ்ச் ஓபனில் அவருக்கு நேரடி நுழைவு அனுமதி தர முடியாது என அமைப்பாளர்கள் கூறி இருந்தனர்.
ஏடிபி தரவரிசையில் 173-வது இடத்தில் இருந்த ஷரபோவா, பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடிதின் மூலம் முதல் 30 இடங்களுக்குள் வந்து விட்டார். இதன் மூலம் பிரெஞ்ச் ஓபன் வீரர்கள் வரிசைப் பட்டியலில் ஷரபோவாவும் இடம் பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT