செய்திகள்

உலகக்கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

DIN

ஒடிஸாவில் நவம்பர் 28-ஆம் தேதி தொடங்க இருக்கும் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணியை ஹாக்கி இந்தியா இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. 

இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் வரும் 28-ஆம் தொடங்க இருக்கிறது. இதில், இந்திய அணி பெல்ஜியம், கனடா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் 'சி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை ஹாக்கி இந்தியா இன்று அறிவித்தது. 

அணி விவரம்:

கோல் கீப்பர்: பி.ஆர்.ஸ்ரீஜேஷ், கிரிஷன் பஹதூர் பதக்.

தடுப்பாட்டக்காரர்கள்: ஹர்மன்பிரீத் சிங், பிரேந்தர லக்ரா, வருண் குமார், கோதாஜித் சிங் கதம்பம், சுரேந்திர் குமார், அமித் ரோஹிதாஸ்.  

நடுகள வீரர்கள்: மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங் கங்குஜன் (துணை கேப்டன்), நிலாகந்தா சர்மா, ஹார்திக் சிங், சுமித். 

முன்கள வீரர்கள்: அகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், தில்பிரீத் சிங், லலித் குமார் உபத்யாய, சிம்ரான்ஜீத் சிங். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

கண்களே தியான மண்டபம்...!

பேஸ்பாலாக மாறிவரும் கிரிக்கெட்: சாம் கரண் நெகிழ்ச்சி!

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

SCROLL FOR NEXT