செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

முதல் இரு டெஸ்ட் ஆட்டங்களுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 14 பேர் கொண்ட டெஸ்ட் அணியில்... 

எழில்

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது.

டி20 தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. முதல் டி20 ஆட்டத்தை ஆஸ்திரேலியா அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 6 முதல் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரு டெஸ்ட் ஆட்டங்களுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 14 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் மார்கஸ் ஹாரிஸ் என்கிற 26 வயது வீரர் இடம்பெற்றுள்ளார். மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட், பேட் கம்மின்ஸ், கிறிஸ் டிரெமெயின் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 

ஆஸ்திரேலிய அணி

மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் ஃபிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், டிம் பெயின், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட், நாதன் லயன், கிறிஸ் டிரெமெயின், பீட்டர் சிடில், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

சூரசம்ஹாரம்: அக்.27இல் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை

முக்காணியில் ரூ. 16.90 லட்சத்தில் வடிகால் பணி தொடக்கம்

திமுக அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவிப்போம்: நயினாா் நாகேந்திரன்

SCROLL FOR NEXT