முகப்பு
செய்திகள்

2018-ல் அதிக டெஸ்ட் சதங்கள்: விராட் கோலியின் சாதனையைச் சமன் செய்த வங்கதேச வீரர்

சிட்டகாங்கில் நடைபெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகள் - வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் ஆட்டத்தில்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:41 PM
பகிர்:


சிட்டகாங்கில் நடைபெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகள் - வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் ஆட்டத்தில் வங்கதேச பேட்ஸ்மேன் மோமினுல் ஹக் சதம் அடித்துள்ளார்.

167 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த மோமினுல் இந்தச் சதத்தின் மூலம் கோலியின் சாதனையைச் சமன் செய்துள்ளார்.

விராட் கோலி இந்த வருடம் நான்கு டெஸ்ட் சதங்கள் எடுத்துள்ளார். அதேபோல இந்த வருடம் நான்காவது டெஸ்ட் சதத்தை எட்டியுள்ள மோமினுல் கோலியின் சாதனையை இதன்மூலம் சமன் செய்துள்ளார். எனினும் கோலிக்கு 18 இன்னிங்ஸில் 4 சதங்கள் எடுத்தார். ஆனால் மோமினுல், 13 இன்னிங்ஸில் 4 சதங்களை எட்டியுள்ளார்.

Advertisement

2018-ல் கோலி, மோமினுல் ஆகிய இருவர் மட்டுமே 4 டெஸ்ட் சதங்களை எடுத்துள்ளார்கள். இதர வீரர்கள் யாரும் 2 டெஸ்ட் சதங்களுக்கு மேல் எடுத்ததில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments