டாஸுக்குப் பயன்படுத்தும் நாணயத்தைச் சோதனை செய்யவும்: ரூட்டின் அதிர்ஷ்டம் குறித்து அஸ்வின் கிண்டல்!
ரூட், தொடர்ச்சியாக வெல்லும் எட்டாவது டாஸ் இது. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஐந்து டெஸ்ட் ஆட்டங்களிலும்...
கொழும்பில் இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
ரூட், தொடர்ச்சியாக வெல்லும் எட்டாவது டாஸ் இது. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஐந்து டெஸ்ட் ஆட்டங்களிலும் டாஸ் வென்றார் ரூட் (ஐந்திலும் கோலி தோற்றார் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் பூவா தலையா எனச் சொன்னது அவர்தான்). தற்போது இலங்கைக்கு எதிரான 3 டெஸ்டுகளிலும் டாஸ் வென்றுள்ளார் ரூட்.
1960-61-ல் இங்கிலாந்தின் கோலின் கெளட்ரே தொடர்ச்சியாக 9 டெஸ்ட் ஆட்டங்களில் டாஸ்களை வென்று முதலிடத்தில் உள்ளார். ரூட் போல இதர நான்கு கேப்டன்களும் தொடர்ச்சியாக 8 முறை டாஸ்களை வென்றுள்ளார்கள்.
Advertisement
இதைக் கிண்டல் அடித்து இந்திய வீரர் அஸ்வின் ட்வீட் செய்ததாவது:
ரூட் 8-வது முறையாக டாஸை வென்றுள்ளார். இங்கிலாந்து அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. எனினும் தொடர்ச்சியாக டாஸை இங்கிலாந்து அணி வெல்வது அபாரமாக உள்ளது. அன்பான ஆட்ட நடுவர்களே, டாஸுக்குப் பயன்படுத்தும் நாணயத்தைச் சோதனை செய்யவும் என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.