ஐந்து பேர் அரை சதங்கள்: நல்ல பேட்டிங் பயிற்சி கிடைத்த திருப்தியில் இந்திய அணி!
ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 358 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 358 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா-கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகளிடையேயான பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. சிட்னியில் செவ்வாய்க்கிழமை இரவு முதலே தொடங்கிய மழை, புதன்கிழமை காலையும் தொடர்ந்து நீடித்தது. இதனால் மைதானம் முழுவதுமாக ஈரப்பதம் அடைந்தது.
2-ம் நாளான இன்று இந்திய அணிக்கு நல்ல பேட்டிங் பயிற்சி கிடைத்தது. பிருத்வி ஷா, புஜாரா, கோலி, ரஹானே, விஹாரி ஆகியோர் அரை சதமெடுத்தார்கள். ரோஹித் சர்மா 40 ரன்கள் எடுத்தார். முன்னணி பேட்ஸ்மேன்களில் ராகுல் மட்டும் 3 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றினார்.
Advertisement
இந்திய அணி 92 ஓவர்களில் 358 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய லெவன் அணியின் ஆரோன் ஹார்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2-ம் நாளின் முடிவில் ஆஸ்திரேலிய லெவன் அணி, 4 ஓவர்கள் விளையாடி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது.