செய்திகள்

ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தை தக்க வைத்த கோலி, பும்ரா

ஒருநாள் அணி, பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. 

Raghavendran

ஒருநாள் அணி, பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. 

இதில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் முதலிடங்களை தக்க வைத்துக்கொண்டனர். 

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 884 புள்ளிகளுடன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார். இந்திய துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா 842 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளார். 802 புள்ளிகளுடன் ஷிகர் தவன் 5-ஆவது இடத்தில் உள்ளார். ஜோ ரூட் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் முறையே 3 மற்றும் 4-ஆம் இடங்களைப் பிடித்தனர்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா 797 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்தார். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 788 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ் 700 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தைப் பிடித்தார். டிரென்ட் போல்ட், ஹாசில்வுட் 4 மற்றும் 5-ஆம் இடங்களில் உள்ளனர்.

அணிகளுக்கான தரவரிசையில் 127 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. இந்தியா 122 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து 3-ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 4-ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 5-ஆவது இடத்திலும் உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT