முகப்பு
செய்திகள்

சொந்த மண்ணில் வீரநடை போடும் இந்திய அணி: தொடரும் டெஸ்ட் தொடர் வெற்றிகள்!

சொந்த மண்ணில் வேறெந்த அணியை விடவும் இந்திய அணியே மிகவும் பலம் பொருந்திய அணியாக உள்ளது....

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:04 PM
பகிர்:

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. 

சொந்த மண்ணில் வேறெந்த அணியை விடவும் இந்திய அணியே மிகவும் பலம் பொருந்திய அணியாக உள்ளது. மே.இ. அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி அதனை மீண்டும் நிரூபித்துள்ளது. அதுதொடர்பான புள்ளிவிவரங்கள்:

* 2000 முதல் இந்திய அணி உள்ளூரில் 34 டெஸ்ட் தொடர்களில் விளையாடி மூன்றில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. 26 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. 5 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. 

Advertisement

சொந்த மண்ணில் இந்திய அணி தோற்ற மூன்று தொடர்கள்

vs தென் ஆப்பிரிக்கா (2000): 0-2 (2) 
vs ஆஸ்திரேலியா (2004): 1-2 (4)
vs இங்கிலாந்து (2012): 1-2 (4) 

* உள்ளூரில் இந்திய அணியின் தொடர்ச்சியான 10-வது தொடர் வெற்றி. ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக தலா ஒரு டெஸ்டுகளில் விளையாடி வென்றது இந்திய அணி. இதுபோல தொடர்ச்சியாக 10 தொடர்களில் வென்று ஆஸ்திரேலிய அணியின் சாதனையுடன் சமன் செய்துள்ளது. அதற்கு முன்பு 2000 மற்றும் 2008 ஆகிய வருடங்களில் ஆஸ்திரேலிய அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு (10 தொடர்கள்) முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இவ்விரு அணிகளைத் தவிர இதர அணிகள் 8-க்கும் அதிகமான தொடர்ச்சியான உள்ளூர் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் பெற்றதில்லை. 

* 23-1: 2013 முதல் இந்திய அணியின் உள்ளூர் டெஸ்டுகளின் வெற்றி -தோல்வி இது. 2013 முதல் வேறெந்த அணியும் உள்ளூரில் இந்தளவுக்கு வெற்றிகளைக் குவித்ததில்லை. விளையாடிய 29 டெஸ்டுகளில் 23-ஐ வென்றுள்ளது இந்திய அணி. அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. 27 டெஸ்டுகளில் 20 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் அந்த அணி சந்தித்துள்ளது. 

* மே.இ. அணிகளுக்கு எதிரான கடைசி 14 டெஸ்ட் தொடர்களில் இரு அணிகளும் சம வெற்றிகளை அடைந்துள்ளன. 2002-03 முதல் மே.இ. அணிக்கு எதிராக விளையாடிய 7 டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி வென்றுள்ளது. இதில் விளையாடிய 21 டெஸ்டுகளில் இந்திய அணி ஒரு டெஸ்டிலும் தோல்வியடைந்ததில்லை. ஆனால் அதற்கு முன்பு விளையாடிய 7 டெஸ்ட் தொடர்களிலும் இந்தியாவை வீழ்த்தியுள்ளது மே.இ. அணி. 2002-03க்கு முன்பு இரு அணிகளும் விளையாடிய 16 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி 2-ல் மட்டுமே வென்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments