முகப்பு
செய்திகள்

முன்னாள் வீரர் ஜெயசூர்யா மீது ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு புகார்!

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா, ஐசிசி விதிமுறைகளை மீறியுள்ளதாக...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:04 PM
பகிர்:

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா, ஐசிசி விதிமுறைகளை மீறியுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக ஜெயசூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஐசிசி. குற்றச்சாட்டுகளுக்கு 14 நாள்களில் பதில் அளிக்கும்படி கட்டளையிடப்பட்டுள்ளது. 

இலங்கை கிரிக்கெட்டில் உள்ள ஊழல்கள் குறித்து ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை செய்து வருகிறது. ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவுக்கு ஒத்துழைப்பு அளிக்காதது, சரியான தகவல்கள் அளிக்காதது மற்றும் ஐசிசி விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கில் ஆதாரங்களை அழிக்க முற்படுவது போன்ற குற்றச்சாட்டுகள் ஜெயசூர்யா மீது சுமத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து விரைவில் பதில் அளிக்க அவருக்கு ஐசிசி கட்டளையிட்டுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments