முகப்பு
செய்திகள்

தமிழனென்று  சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா: தமிழக வீரருக்கு கமல் பாராட்டு

மும்முறை தாண்டும் ஒலிம்பிக்  பதக்கம் வென்ற தஞ்சையைச்  சேர்ந்த திரு.பிரவீன் சித்ரவேலிற்கு பாராட்டுக்கள்... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:06 PM
வெண்கலம் வென்ற பிரவீண் சித்திரைவேல்.
பகிர்:

ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் போட்டி தடகளம் மும்முறை தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த சித்திரைவேல் வெண்கலம் வென்றார். செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மும்முறை தாண்டுதல் இரண்டாம் கட்ட போட்டியில் பிரவீண் சித்திரைவேல் 15.84 மீ தூரம் தாண்டி வெண்கலம் வென்றார். கியூபா தங்கமும், நைஜீரியா வெள்ளியும் வென்றன.

பிரவீண் சித்திரைவேல் வெண்கலம் வென்றதற்கு நடிகர் கமல் ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: 

மும்முறை தாண்டும் ஒலிம்பிக்  பதக்கம் வென்ற தஞ்சையைச்  சேர்ந்த திரு.பிரவீன் சித்ரவேலிற்கு பாராட்டுக்கள். தமிழனென்று  சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று கூறியுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments