செய்திகள்

சுருண்டது ஆஸி.,: தொடரை வென்று பாக்., அபாரம்

DIN

ஆஸ்திரேலியாவுடனான 2-ஆவது போட்டியில் 373 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. 

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 16-ஆம் தேதி தொடங்கி அபுதாபியில் நடைபெற்று வந்தது. இதில், முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 282 ரன்களுக்கும், ஆஸ்திரேலிய அணி 145 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இதைத்தொடர்ந்து, 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 400 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 538 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இமாலய இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 47 ரன்கள் எடுத்திருந்தது. பின்ச் 24 ரன்களுடனும், ஹெட் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இந்நிலையில், இருவரும் இன்று (வெள்ளிக்கிழமை) 4-ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஆனால், அப்பாஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அந்த அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்கவில்லை. அதிகபட்சமாக லபுஷாக்னே 43 ரன்கள் எடுத்தார். இதனால், அந்த அணி 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

பாகிஸ்தான் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய அப்பாஸ் 2-ஆவது இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன்மூலம், பாகிஸ்தான் அணி 373 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என கைப்பற்றியது. 

இரண்டு இன்னிங்ஸிலும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அப்பாஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரில் மொத்தம் 17 விக்கெட்டுகளை வீழ்த்திய அதே அப்பாஸ் தொடர்நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.  

இரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 24-ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

தமிழகத்தின் மின் நுகா்வு புதிய உச்சம்

துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதத் திருவிழா!

தேமுதிக சாா்பில் நல உதவிகள்

பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்: போக்குவரத்து ஆணையா் முக்கிய உத்தரவு

SCROLL FOR NEXT