முகப்பு
செய்திகள்

இரு கைகளில் பந்து வீசும் கமிண்டு: இலங்கை டி20 அணியில் சேர்ப்பு

வலது, இடது என இரு கைகளிலும் பந்துவீசும் இளம் வீரர் கமிண்டு மெண்டிஸ் இலங்கை டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:40 AM
பகிர்:


வலது, இடது என இரு கைகளிலும் பந்துவீசும் இளம் வீரர் கமிண்டு மெண்டிஸ் இலங்கை டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியுடன் வரும் சனிக்கிழமை ஒரு டி20 ஆட்டத்தில் இலங்கை அணி மோதுகிறது. இதற்காக திஸாரா பெரைரா தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 20 வயதே ஆன இளம் வீரர் கமிண்டு மெண்டிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் வலது, இடது என இரு கைகளிலும் மாறி மாறி பந்துவீசும் திறன் கொண்டவர். தற்போது 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் விளையாடி வருகிறார். முதன்முறையாக சீனியர் அணியில் கமிண்டு சேர்க்கப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.