டென்னிஸ் தரவரிசை நடால், சிமோனா தொடர்ந்து முதலிடம்
டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் பிரிவில் ரபேல் நடாலும், மகளிர் பிரிவில் சிமோனா ஹலேப்பும் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகின்றனர்.
டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் பிரிவில் ரபேல் நடாலும், மகளிர் பிரிவில் சிமோனா ஹலேப்பும் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகின்றனர்.
ஏடிபி ஆடவர் தரவரிசைப் பட்டியலில் ஸ்பெயினின் ரபேல் நடால் 7600 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து நோவக் ஜோகோவிச் (7445) இரண்டாம் இடத்திலும், ரோஜர் பெடரர் (6260) மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
4. டெல் பொட்ரோ (5760), 5. அலெக்சாண்டர் வெரேவ் (5025), 6. மரின் சிலிக் (4185), 7. டொமினிக் தீம் (3825), 8. கெவின் ஆண்டர்சன் (3730),
9. ஜான் ஐஸ்நர் (3380), 10. கிரிகோர் டிமிட்ரோவ் (3335).
மகளிர் தரவரிசை: டபிள்யுடிஏ மகளிர் தரவரிசையில் ருமேனியாவின் சிமோனா ஹலேப் (6921) புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் (5375) இரண்டாம் இடத்திலும், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி (5086) மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
4. நவோமி ஒஸாகா (4740), 5. பெட்ரா விட்டோவா (4255), 6. ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (3943), 7. எலினா விட்டோலினா (3850), 8. கரோலினா பிளிஸ்கோவா (3840), 9. கிகி பெர்டனஸ் (3710), 10. டாரியா கஸட்கினா (3315).
கிரெம்ளின் கோப்பை பட்டத்தை வென்றதின் மூலம் கஸட்கினா முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். வீனஸ் வில்லியம்ஸ் 40-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.