தமிழக ரஞ்சி அணியின் கேப்டனாக 24 வயது இந்திரஜித் நியமனம்!
ஆல்ரவுண்டர் பாபா இந்திரஜித், தமிழக ரஞ்சி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆல்ரவுண்டர் பாபா இந்திரஜித், தமிழக ரஞ்சி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ரஞ்சி அணியில் விளையாடவுள்ள தமிழக அணி நாளை அறிவிக்கப்படவுள்ளது. கடந்த வருடம் தமிழக அணியின் கேப்டனாக முகுந்த் பதவி வகித்த நிலையில் தற்போது இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது.
42 முதல்தர ஆட்டங்கள் விளையாடியுள்ள இந்திரஜித், 2662 ரன்கள் எடுத்துள்ளார். ஏழு சதங்கள். அதிகபட்சமாக 200 ரன்கள் எடுத்துள்ளார்.
Advertisement
குரூப் பி அணியில் தமிழ்நாடு, தில்லி, பஞ்சாப், பெங்கால், மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் உள்ளன. திண்டுக்கல் நகரில் நவம்பர் 1 அன்று மத்தியப் பிரதேச அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை விளையாடவுள்ளது தமிழக அணி.