2-வது ஒருநாள்: 12 பேர் கொண்ட இந்திய அணியில் மாற்றம் இல்லை!
12 பேர் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஒருநாள் ஆட்டத்தில்...
5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் குவஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. முதல் ஒரு நாள் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்களை குவித்தது. ஷிம்ரன் ஹெட்மயர் அபாரமாக ஆடி 106 ரன்களை விளாசினார். பின்னர் ஆடிய இந்தியா 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 326 ரன்களை எடுத்து வென்றது. ரோஹித் சர்மா 152, கோலி 140 ரன்களைக் குவித்தனர்.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் விசாகப்பட்டணத்தில் நாளை நடைபெறுகிறது. இதற்கான 12 பேர் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஒருநாள் ஆட்டத்தில் இடம்பெற்ற அதே அணி இடம்பெற்றுள்ளது. அந்த ஆட்டத்தில் குல்தீப் யாதவ் விளையாடவில்லை. நாளை நடைபெறும் ஆட்டத்தில் கலீல் அகமதுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் இடம்பெற வாய்ப்புண்டு.
இந்திய அணி (12 வீரர்கள்): விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, தவன், ராயுடு, ரிஷப் பந்த், தோனி, ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், ஷமி, கலீல் அகமது.
Advertisement