செய்திகள்

புரோ கபடி லீக்: தமிழ்த் தலைவாஸ், யு மும்பா வெற்றி

DIN


புரோ கபடி லீக் போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை புணேயில் நடைபெற்ற ஆட்டத்தில் யு மும்பா அணி 41-20 என்ற புள்ளிக்கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. 
நட்சத்திர வீரர் அபோஸர் மிகானி இல்லாத நிலையில் டைட்டன்ஸ் அணி கடும் பாதிப்பை சந்தித்தது. 
யு மும்பா வீரர் சித்தார்த் தேசாய் 17 புள்ளிகள் குவித்து எதிரணியை நிலைகுலையச் செய்தார்.
முதல் பாதியில் 17-12 என மும்பா அணி முன்னிலை பெற்றிருந்தது. ராகுல் செளத்ரி 700 ரைடு புள்ளிகளை பெற்ற முதல் வீரர் ஆனார். இறுதியில் 41-20 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பா வென்றது.
தமிழ்த் தலைவாஸ் வெற்றி: பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் தமிழ்த் தலைவாஸ் அணி என்ற 36-31புள்ளிகள் கணக்கில் புணேரி பல்தான் அணியை வீழ்த்தியது.
கேப்டன் அஜய் தாக்குர், மஞ்சித் சில்லார் ஆகியோர் தலைவாஸ் அணியில் அபாரமாக ஆடி புள்ளிகளை குவித்தனர்.
இதன் மூலம் தொடர்ந்து தனது 5 தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது தலைவாஸ் அணி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT