செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்கள்: ஒரு வெற்றியும் பெறாமல் நாடு திரும்பிய ஆஸ்திரேலிய அணி

பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுவதற்காகக் கடந்த மாதம்...

எழில்

பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுவதற்காகக் கடந்த மாதம் துபை வந்தது ஆஸ்திரேலிய அணி.

இரு டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என பாகிஸ்தான் வென்றது. முதல் டெஸ்டைப் போராடி டிரா செய்து பாராட்டைப் பெற்றது ஆஸ்திரேலிய அணி.

பிறகு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஒரு டி20 ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

பிறகு 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதிலும் பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தியது. 3-0 என வெற்றி கண்டுள்ளது பாகிஸ்தான் அணி.

நேற்று நடைபெற்ற டி20 ஆட்டத்தில் முதல் விளையாடிய பாகிஸ்தான் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய அணி 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து டி20 தொடரில் 3-0 என முழு வெற்றியடைந்துள்ளது பாகிஸ்தான் அணி. 

இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட், டி20 என இரு தொடர்களிலும் ஒரு வெற்றியும் பெறாமல் நாடு திரும்பியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 

அடுத்ததாக, இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்கிறது ஆஸ்திரேலிய அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

2026 தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ஏ.ஐ.சி.சி.டி.யு ஆலோசகா் எஸ்.குமாரசாமி

பாஜகவினா் ரத்த தானம்

ஆட்சியா் அலுவலகத்தில் சமுகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT