முகப்பு
செய்திகள்

நீக்கம் குறித்து தோனியிடம் விளக்கியபோது அதை ஏற்றுக்கொண்டார்: தேர்வுக்குழுத் தலைவர்

தோனியை அணியிலிருந்து நீக்குவதற்கு முன்பு அவரிடம் தொலைப்பேசியில் பேசினோம்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இரண்டு தொடர்களுக்கும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனால் கிரிக்கெட் ரசிகர்களின் அதிருப்தியை எதிர்கொண்டுள்ளார் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத். இந்நிலையில் ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

தோனியை அணியிலிருந்து நீக்குவதற்கு முன்பு அவரிடம் தொலைப்பேசியில் பேசினோம். நானே தோனியிடம் பேசினேன். அவர் கனிவாக நடந்துகொண்டார். இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான தேவையை அவரிடம் உணர்த்தினேன். இந்த யோசனையை அவர் ஏற்றுக்கொண்டார். ரிஷப் பந்த் அணியில் ஏற்கெனவே உள்ளார். தினேஷ் கார்த்திக்கும் மோசமாக ஆடவில்லை. எனவேதான் இந்த முடிவு என்று கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →