செய்திகள்

உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு!

35 வயதுக்கு முன்பே ஓய்வு பெறும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலும் இவரும் இணைந்துள்ளார்...

எழில்

2005-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக ஒருநாள் ஆட்டத்திலும் 2006-ல் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும் அறிமுக டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் இந்திய அணி சார்பாகக் களமிறங்கிய ஆர்பி சிங் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

35 வயதுக்கு முன்பே ஓய்வு பெறும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலும் இவரும் இணைந்துள்ளார். 32 வயது ஆர்பி சிங் கடைசியாக 2011-ல் இந்திய அணிக்காக விளையாடினார். இந்நிலையில் தற்போது ஓய்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய அணிக்காக 14 டெஸ்டுகளிலும் 58 ஒருநாள் ஆட்டங்களிலும் 10 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 

2007-ல் இங்கிலாந்தில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வதற்கு முக்கியப் பங்கு வகித்தார் ஆர்பி சிங். லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் எடுத்து கெளரவம் அடைந்தார். 2008-ல் பெர்த் டெஸ்டில் வெற்றி பெறவும் ஆர்பி சிங் முக்கியக் காரணமாக அமைந்தார். 2007 டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 12 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார் ஆர்பி சிங்.

2011-ல் மியாமி கடற்கரையில் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்தபோது இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்காக இந்திய அணிக்குத் தேர்வானார் ஆர்பி சிங். பிறகு ஓவல் டெஸ்டில் விக்கெட் எதுவுமின்றி 34 ஓவர்கள் வீசினார். அதன்பிறகு இவர் ஒரு டெஸ்டிலும் விளையாடவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT