செய்திகள்

கவுன்டி கிரிக்கெட்டில் சதமடித்தார் முரளி விஜய்: இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவாரா?

எழில்

இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட தொடக்க வீரர் முரளி விஜய், தற்போது இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் எஸெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 

நாட்டிங்ஹம்ஷைர் அணியுடனான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் முரளி விஜய் 56 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் பிரமாதமாக விளையாடி, சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். 282 ரன்கள் இலக்கை முரளி விஜய்யின் சதத்தால் (100 ரன்கள்) எஸெக்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதற்கான அணி விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் முரளி விஜய் மீண்டும் தன் திறமையை நிரூபித்து வருவதால் அவர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவாரா என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. எனினும் அத்தொடருக்கு ராகுல், பிருத்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகிய மூவருமே தொடக்க வீரர்களாகத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT