செய்திகள்

மும்பை மாரத்தான் பந்தயத்துக்கு சர்வதேச அங்கீகாரம்

தினமணி

வரும் 2019 ஜனவரியில் நடைபெறவுள்ள டாடா மும்பை மாரத்தான் ஓட்டப்பந்தயத்துக்கு சர்வதேச தடகள சம்மேளனம் (ஐஏஏஎஃப்) கோல்ட் லேபல் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
 அடுத்த ஆண்டு 16-ஆவது மும்பை மாரத்தான் பந்தயம் நடைபெறுகிறது. ஆசியக் கண்டத்தில் ஏற்கெனவே கோல்ட் லேபல் அங்கீகாரம் பெற்றுள்ள மாரத்தான் பந்தயங்களோடு தற்போது மும்பை மாரத்தானும் இணைகிறது.
 இந்தியாவிலேயே இந்த அங்கீகாரம் பெற்ற ஓரே மாரத்தான் இதுவாகும்.
 6 பிரிவுகளில் மொத்தம் 45 ஆயிரம் பேர் போட்டியில் பங்கேற்கின்றனர்.
 ஐஏஏஎஃப் கோல்ட் லேபல் அங்கீகாரம் என்பது, பந்தயத்தின் விதிமுறைகள், அமைப்பாளர்களின் செயல்பாடு, உலகளாவிய பங்கேற்பு, ஆடவர், மகளிருக்கான பரிசுத் தொகை, மருத்துவ உதவி, நேரடி ஒளிபரப்பு, ஊடகங்களுக்கு வசதிகள் போன்றவை அடிப்படையில் வழங்கப்படுகிறது.
 மும்பை மாரத்தான் போட்டி நடத்தும் புரோகேம் நிர்வாகி விவேக் சிங் இத்தகவலை தெரிவித்துள்ளார். இந்திய தடகள சம்மேளனத் தலைவர் அடில் சுமரிவாலா ஐஏஏஎஃப் கோல்ட் லேபல் அங்கீகார முடிவை வரவேற்றுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT