செய்திகள்

ஷிகர் தவன் சதம்: இந்தியா 285 ரன்கள் குவிப்பு

Raghavendran

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் துபையில் நடைபெற்று வருகிறது. இதில் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் செவ்வாய்கிழமை மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது.

ஒரு கட்டத்தில் 320 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியை ஹாங்காங் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக கட்டுப்படுத்தினர். 

அதிகபட்சமாக துவக்க வீரர் ஷிகர் தவன் 127 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் இது தவனின் 14-ஆவது சதமாக அமைந்தது. அம்பத்தி ராயுடு 60 ரன்கள் சேர்த்தார்.

ஹாங்காங் தரப்பில் கின்சித் ஷா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இஷான் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷான் நவாஸ், ஆஸிஸ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT