முகப்பு
செய்திகள்

ரசிகர்களின் தொல்லையால் தற்காலிகமாக ட்விட்டரை விட்டு வெளியேறியுள்ள சானியா மிர்சா!

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் தொடங்குவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு, சமூகவலைத்தளங்களை விட்டு வெளியேறுவது பாதுகாப்பானது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

2018 ஆசியக் கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள இந்திய-பாகிஸ்தான் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. 

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை மணந்துள்ள பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சில நாள்களுக்குச் சமூகவலைத்தளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அவரிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டு தொந்தரவு செய்வதால் அவர் இம்முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் தொடங்குவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு, சமூகவலைத்தளங்களை விட்டு வெளியேறுவது பாதுகாப்பானது. ஏனெனில் இங்கே மடத்தனமாகக் கூறப்படப்போகிற கருத்துகள், கர்ப்பிணியை மட்டுமல்லாமல் சாதாரண மனிதனையும் உடல்நலமில்லாமல் செய்துவிடும். பிறகு பார்க்கலாம் மக்களே. ஞாபகம் கொள்ளுங்கள், இது கிரிக்கெட் ஆட்டம் மட்டுமே என்று கூறியுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments