செய்திகள்

ஜாதவ்பூர் பல்கலையின் டாக்டர் பட்டத்தை ஏற்க டெண்டுல்கர் மறுப்பு

DIN


மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் தனக்கு வழங்கிய டாக்டர் பட்டத்தை (டி.லிட்) ஏற்க மறுத்து விட்டார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.
கிரிக்கெட்டில் அவரது சாதனையை பாராட்டும் வகையில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் சச்சினுக்கு டாக்டர் பட்டம் வழங்க தீர்மானித்தது. இதற்காக பல்கலை. நிர்வாகம் சச்சினை அணுகியது. ஆனால் அவர் டாக்டர் பட்டத்தை ஏற்க இயலாது என மறுத்து இ-மெயில் அனுப்பி உள்ளார். நெறிமுறைகளின்படி தான் பட்டத்தை ஏற்கவில்லை. ஏற்கெனவே ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தனக்கு வழங்க முன்வந்த டாக்டர் பட்டத்தையும் ஏற்கவில்ல என டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக நிர்வாகம் அதன் வேந்தரும், ஆளுநருமான கேசரிநாத் திரிபாதிக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT